

இதேபோன்று சசிகலாவின் உறவினர் திவாகரன், விவேக் ஆகிய வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
திருவாரூரில் மன்னார்குடியின் சுந்தரகோட்டையிலுள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. திருவாரூர் கீழதிருப்பாலக்குடியில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
மன்னார்குடியில் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திவாகரன் ஆதரவாளர்கள் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
மன்னார்குடியில் தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.