தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்பு

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்பு
Published on

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்து வந்த க.சண்முகம் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக, மத்திய அரசின் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள அமைச்சக செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ்ரஞ்சன் நியமிக்கப்பட்டார்.

இதற்காக ராஜீவ்ரஞ்சன், மத்திய அரசின் அயல் பணியில் இருந்து தமிழக அரசு பணிக்காக கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார். ராஜீவ்ரஞ்சனை புதிய தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இன்று காலை ராஜீவ்ரஞ்சன், சென்னை தலைமை செயலகத்தில் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முக்கிய பொறுப்புகளை வகித்தவர்

ராஜீவ்ரஞ்சன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு ஆனவர். இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்த இவர், அறிவுசார் சொத்துரிமை பிரிவில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி.) பெற்றுள்ளார். லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் மையத்தில், பப்ளிக் பாலிசியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007-ம் ஆண்டு முதல் இணைச் செயலாளர் அந்தஸ்திலும், 2009-ம் ஆண்டு முதல் முதன்மை செயலாளர் அந்தஸ்திலும் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.

மத்திய அரசின் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், சிறந்த நிர்வாக திறமை பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை மிக்கவர். வருகிற செப்டம்பர் மாதம் வரை இவரது பதவிக்காலம் உள்ளது. தமிழக அரசில் இதுவரை 46 தலைமை செயலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்கும் ராஜீவ்ரஞ்சன், தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com