அழுகிய நிலையில் முதியவர் பிணம் மீட்பு

மருதையாற்றின் கரையோரத்தில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
அழுகிய நிலையில் முதியவர் பிணம் மீட்பு
Published on

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தின் அருகே மருதையாறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் எலும்பு கூடாக முதியவர் பிணம் கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தூத்தூர் போலீசாரால் காணவில்லை என்று தேடப்பட்டு வந்த ஓரியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணி (வயது 80) என்பது தெரியவந்தது. இருப்பினும் அவரது உடற்பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் கவிச்சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com