பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு கண் துடைப்பு நாடகம் - கே.எஸ்.அழகிரி கருத்து

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் உண்மை நிலையை ஆய்வு செய்து பார்க்கும்போது, இந்த விலை குறைப்பினால் சில்லரை பணவீக்க அளவில் 0.15 சதவீத அளவில் தான் பயன் தரும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது. மத்திய அரசுக்கு மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோல மக்கள் நீதி மய்ய கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், 'ஏற்கனவே ரூ.10 அதிகரித்து விட்டு, இப்போது விலையை குறைப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை தராது. பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழி தான் உண்மையான தீர்வை தரும்' என்று கூறப்பட்டுள்ளது. புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, கியாஸ் சிலிண்டர் மானியம் உயர்வு போன்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com