சாலையின் நடுவே இருந்த விநாயகர் கோவில் அகற்றம்

ஆரணியில் சாலையின் மையத்தில் இருந்த விநாயகர் கோவிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது வருவாய்த்துறையினர் அகற்றினர்.
சாலையின் நடுவே இருந்த விநாயகர் கோவில் அகற்றம்
Published on

ஆரணி

ஆக்கிரமிப்புகள்

ஆரணியில் இருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் இருந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன.

மேலும் சாலையின் மையத்தில் விநாயகர் கோவிலும் இருந்தது. இது தொடர்பாக வருவாய் துறையினருக்கு நீண்ட காலமாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எஸ்.வி. நகரத்தில் சாலையின் மையத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை அகற்ற பலமுறை புகார் அளித்திருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

விநாயகர் கோவில் அகற்றம்

இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் கோவில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.

இதனால் இனி அந்த பகுதியில் போக்குவரத்து பிரச்சனை இருக்காது என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com