போலீசில் புகார் அளித்ததால் விரக்தி: தீக்குளித்த நடிகையின் காதலன் சாவு

திருமணம் செய்ய வற்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்த விவகாரத்தில் தீக்குளித்த நடிகை நிலானியின் காதலன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
போலீசில் புகார் அளித்ததால் விரக்தி: தீக்குளித்த நடிகையின் காதலன் சாவு
Published on

சென்னை,

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிலானி. சின்னத்திரை நடிகையான இவர் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து கைதானவர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவரும், வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன்கோவில் அருகே நிலானி நடித்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்கு காந்தி லலித்குமார் வந்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நிலானியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். படக்குழுவினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com