உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்

உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.
உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்
Published on

உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.

ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழுவின் ஆலோசனை கூட்டம் மக்கள் நீதி மய்ய கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், தமிழ் புலிகள், திராவிட கழகம், ஆதி தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தலித் விடுதலை இயக்கம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்கவும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி கட்டணம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் பெயரை மாற்ற முயலும் மத்திய அரசை கண்டித்தும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஏழை, எளிய மக்களின் கல்வியை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com