ரூ.1.93 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்

கண்டமானடி ரெயில்வே அணுகு சாலையில் ரூ.1.93 கோடி மதிப்பில் நடைபெற்ற சாலைப்பணிகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.
ரூ.1.93 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்
Published on

விழுப்புரம் அருகே கண்டமானடி ரெயில்வே அணுகு சாலையில் ரூ.1.93 கோடி மதிப்பில் இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மரகதபுரம், கண்டமானடி ரெயில்வே இருப்புப்பாதைக்கு செல்லும் அணுகு சாலையில் 5.5 மீட்டர் அகலத்தில் இடைவெளி சாலையாக இருந்ததை தரம் உயர்த்தி 7.5 மீட்டர் அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் 4 சிறுபாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சரக்கு வாகனங்கள் சென்றுவர எளிமையாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, கண்டமானடி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com