'ரூட் தல' பிரச்சினை: மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் - 9 மாணவர்கள் கைது

‘ரூட் தல’ பிரச்சினையில் மாநகர பஸ்சில் தனியாக பயணம் செய்த கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
'ரூட் தல' பிரச்சினை: மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் - 9 மாணவர்கள் கைது
Published on

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரிஸ்வான் என்ற மாணவர் நேற்று முன்தினம் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது இதர கல்லூரி மாணவர்கள் 9 பேர் அந்த பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் மாணவர் ரிஸ்வானை பஸ்சில் வைத்தே சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த மாணவரின் அடையாள அட்டையை பிடுங்கி கொண்டு பஸ்சை விட்டு இறக்கி விட்டனர். தனியாக மாட்டி தாக்கப்பட்ட மாணவர் ரிஸ்வான் காயம் அடைந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக அவர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து ரிஸ்வானை தாக்கியதாக இதர கல்லூரி மாணவர்கள் 9 பேரை நேற்று கைது செய்தார். 'ரூட் தல' பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com