

ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கதவாளம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 3,000 மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் சக்திகணேஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்திசீனிவாசன், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சந்திரன், ஒன்றியக குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தன், பானுமதி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.