சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆற்காட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Published on

ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சங்க மாவட்ட இணை பொறுப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். புஷ்பகாந்தா, விஜயகுமாரி, ஜெயந்தி, ராஜசேகரன், மதன் உடள்பட பலர் முன்னிலை வகித்தனர் வர்த்தமானன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை நிறைறேற வலியுறுத்தி பேசினர்.

சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசு துறைகளிலும் உள்ள நிரந்தர காலமுறை ஊதியத்திலான காலி பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை ஒதுக்கி அதில் தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் பதவி வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com