சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்

சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்
Published on

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமைய உள்ள ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

உட்பிரிவுகள்

இத்தகைய சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

i) நிலம்

ii) உட்கட்டமைப்பு வசதிகள் (சாலைவசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்).

iii) ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள்மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள். உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள். எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள். சிறிய ஜவுளி பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட இனங்கள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும், தகவல்களுக்கு

1A-2/1,சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம்- 636 006.0427- 2913006 இணையதளமுகவரி: ddtextilessalem regional@gmail.com,

மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சேலம் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com