சரக்கு வாகனத்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவர்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.
சரக்கு வாகனத்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்
Published on

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மதிய உணவு இடைவேளையின்போது உணவு உண்பதற்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அரசு மாணவர்கள் விடுதிக்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தில் மாணவர்கள் தங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.

இதுபோல் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும், வாகன ஓட்டுனர் மீதும், மாணவர்களை கண்காணிக்க தவறும் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com