கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி


கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி
x

த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கரூர்,

கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாக முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் ஏ.டி.ஜி.பி. தேவாசீர்வாதம் ஆகியோரை உடனடியாக கரூர் செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு நிலவி வரும் சூழல் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்து வருகிறார்.

1 More update

Next Story