கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.

இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். போலீசிலும் புகார் அளித்தனர்.

மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, அந்தக் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் குமாரி மாலை தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவை சந்தித்து பேசினார். அப்போது 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

இதுபற்றி குமாரியிடம் கேட்டபோது, பாலியல் புகார்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com