இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அ.தி.மு.க. பிரமுகர் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அ.தி.மு.க. பிரமுகர் கைது
Published on

தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர், சர்ச் ரோடு, ஜெருசலம் நகரை சேர்ந்தவர் குமணன்(வயது 47). இவர், தாம்பரம் மாநகராட்சி, 53-வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளராக உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் இளம்பெண்ணுக்கு குமணன் பண உதவி செய்து உள்ளதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும், அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமணனை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com