தாமிரபரணியில் சித்தர் வருண ஜெப வழிபாடு

தாமிரபரணியில் சித்தர் வருண ஜெப வழிபாடு நடத்தினார்.
தாமிரபரணியில் சித்தர் வருண ஜெப வழிபாடு
Published on

தமிழகத்தில் நன்கு மழை பெய்து வறட்சி நீங்கி, பசுமை வளம் கொழித்திடவும், குடிநீர் தட்டுப்பாடு முற்றிலுமாக நீங்கிடவும், கடுமையான வெயிலின் தாக்கம் இன்றி மக்கள் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் வாழ்ந்திட வேண்டி பவுர்ணமியை முன்னிட்டு சற்குரு சீனிவாச சித்தர் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு வருண ஜெப வழிபாடு செய்தார்.

அவர் முறப்பாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழுத்தளவு தண்ணீருக்குள் நின்று 7மணி நேரம் ஜல தவத்துடன் கூடிய சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரருக்கு வருண ஜெப சிறப்பு மகா யாகம் நடந்தது. பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தீபாரதனையும் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com