உடைந்த நிலையில் மண்ணி ஆற்றுப்பாலம்

உடைந்த நிலையில் மண்ணி ஆற்றுப்பாலம்
உடைந்த நிலையில் மண்ணி ஆற்றுப்பாலம்
Published on

திருப்பனந்தாள்:

பந்தநல்லூர் அருகே உடைந்த நிலையில் உள்ள மண்ணி ஆற்றுப்பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

பாலத்தின் தூணில் விரிசல்

பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலத்தில் உள்ள ஒரு தூணில் விரிசல் ஏற்பட்டு உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பாலத்தின் வழியே கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைத்து வருகின்றனர். மேலும் இருபுறமும் கனரக வாகனங்கள் செல்ல கூடாது என எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர்.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

தற்போது பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடைந்த நிலையில் உள்ள பாலத்தால் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் புழதிக்குடி கிராம மக்கள் அவசரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த நிலையில் உள்ள மண்ணி ஆற்றுப்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com