தமிழகத்தில் முழுமையாக தெரிந்தது வளைய சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் முழுமையாக தெரிந்தது வளைய சூரிய கிரகணம்
Published on

சென்னை,

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் காலை 8 மணியளவில் தெரிய தொடங்கியது. இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு 11.19 மணி வரை நீடிக்கும். சுமார் 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கும் நிகழ்வு தமிழகத்தில் தெரிய தொடங்கியது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் முழு வளைவு சூரிய கிரகணம் தெரிந்தது.

இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றிருந்தது. அதற்கு பிறகு நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால்தான் காணலாம்.

தமிழகத்தில் சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம். அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ந்தேதிதான் நிகழும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com