கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் புதிய உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.
கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதை செயல் படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையானது கோயில்களில் சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காகச் சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்யவும், முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயிலில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பக்தர்கள் எளிதில் அறியும் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் கோயில் நுழைவு வாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், என்ன என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பக்தர்கள் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் எனவும், திருக்கோவில் நுழைவுவாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும். சக்கர நாற்காலியில் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் மரப்பலகையிலான சாய்வு தளங்கள் அமைத்திட வேண்டும் எனவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com