கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி

புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி
Published on

காரைக்குடி, 

புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

புத்தாண்டு திருப்பலி

ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி இருதயராஜ், ஆனந்தா அருட்கொடை மையத்தின் இயக்குநர் அருட்பணி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தொடர்ந்து பாடகர் குழுவினர் புத்தாண்டு சிறப்பு பாடல்கள் மற்றும் கிறிஸ்தவ பாடல்களை பாடினர்.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல் செக்காலை தூய சகாயமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ்ராஜா, திருத்தொண்டர் மரியஅந்தோணிராஜா ஆகியோர் திருப்பலி நடத்தினர். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மறை மாவட்ட வியாணி அருள்பணி மைய இயக்குநர் அமலன் கலந்துகொண்டு புத்தாண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப்சகாயராஜ் தலைமையிலும், ஆவுடைப்பொய்கை தூய அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜீடு அந்தோணி ஆகியோர் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர் பிரான்சிஸ் சவேரியார் திருச்சபை, கணபதிபட்டி சந்தியாகுவர் திருச்சபை, எஸ்.புதூர் அசெம்பிளி ஆப் காட் திருச்சபையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

சிங்கம்புணரியில் உள்ள சி.எஸ்.ஐ. ஓசன்னா தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com