சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தரிவித்துள்ளது.
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் 11 பஞ்சாயத்து யூனியன்களிலும் மொத்தம் 220 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்து கொள்ளும் மருத்துவக்குழுவினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த பஞ்சாயத்து பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இந்தநிகழ்ச்சி தொடர்பான துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த முகாம்கள் நடைபெறும்.

அப்போது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தடுப்பூசி பணி ஆகிய சிகிச்சைகள் அந்தந்த பஞ்சாயத்து பகுதியில் மேற்கொள்ளப்படும். அனைத்து சிகிச்சைக்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கரைசல், 1 கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வொரு முகாம்களிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போர்களுக்கு தேவையான தீவனப்புல், விதைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இதனை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் அப்பகுதிகளில் பராமரிக்கப்படும் சிறந்த மூன்று கிடேரி கன்றுகள் உரிமையாளர்களுக்கு கன்று பேரணி நடத்தி தேர்வு செய்து பரிசு பொருட்கள் வழங்கப்படும். அத்துடன் சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பினை மேற்கொள்ளும் பண்ணையாளர்களை தேர்வு செய்து 3 பேருக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும்.

எனவே முகாம்கள் நடைபெறும் போது அப்பகுதி கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com