திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள்

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மேயர் தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டு 29-ந் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு கால்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டப்போட்டியும் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு கையுந்து பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டப்போட்டியும் மற்றும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1 கிலோ மீட்டர் நடை போட்டி 50 மீட்டர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், செஸ் மற்றும் கேரம் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு போட்டிகள் நடைபெறும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரம் பெற 7401 7034 82 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com