ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம்
Published on

ஸ்ரீவைகுண்டம்:

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று உற்சவர் கள்ளப்பிரான் சுவாமியின் கவசங்கள் படிகளைய பெற்று பொற்கொல்லர் களால் அறநிலையத்துறையின் துணை ஆணையர் (சரிபார்ப்பு) அதிகாரிகள் முன்னிலையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு திருமஞ்சனம்,காலை 7 மணிக்கு தீபாராதனை, காலை 7.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. காலை 9 மணிக்கு உற்சவரின் கவசங்கள் படிகளையப் பெற்று அதிகாரிகள் மற்றும் ஸ்தலத்தார்கள் முன்பு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கவசங்கள் சாத்தப்பட்டது. மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடைபாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்பகிரகத்திற்குள் எழுந்தருளினார். தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com