எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 20,641 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
Published on

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மெத்தம் 300 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 94 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படை உறுப்பினர்கள், 9 கட்டுகாப்பு மைய அலுவலர்கள் என மெத்தம் 2,069 பேர் ஈடுபட உள்ளனர்.

மேலும் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு, பலத்த பேலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் எடுத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி

பிளஸ்-2 தேர்வை பொறுத்த வரையில் நேற்று முன்தினம் முடிவடைந்து உள்ளது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 3 மையங்களில் நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 1,200 ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com