17,900 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்

சிவகங்கை மாவட்டத்தில் 17,900 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.
17,900 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
Published on

தமிழக முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வுகள் நேற்று தொடங்கியது. வருகிற 20-ந்தேதி முடிய தேர்வுகள் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வை 8,889 மாணவர்களும் 130 தனித்தேர்வர்களும் சேர்த்து 9,019 மாணவர்களும், 9,124 மாணவிகளும் 62 தனித்தேர்வர்களும் சேர்த்து 9,186 மாணவிகளும் என மொத்தம் 18,205 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 8,702 மாணவர்களும் 117 தனித்தேர்வர்களும் சேர்த்து 8,819 மாணவர்களும் 9,024 மாணவிகளும் 57 தனித்தேர்வர்களும் சேர்த்து 9,081 மாணவிகளும் என மொத்தம் 17,900 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 199 மாணவர்களும் 103 மாணவிகளும் சேர்த்து 302 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வுகள் நடைபெறுவதை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com