ரெம்டெசிவிர் மருந்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள்- ராதாகிருஷ்ணன்

ரெம்டெசிவிர் மருந்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள் சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள்- ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா தொற்று பாதித்த பொதுமக்கள், மருத்துவமனைகளில், இடம் கிடைக்கவில்லை என்று பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்கள் சோதனை செய்து சிகிச்சை வழங்குவார். சிக்கலான தருணங்களில் 108 அல்லது 044-6122300 என்ற எண்ணை அழைக்கலாம். அதுபோல 104 என்ற எண்ணையும் அழைக்கலாம். தேவையில்லாமல் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.

சிலர் வீட்டிலேயே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவிர் மருந்து வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com