உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை
Published on

கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, அக்.13-

பட்டாசு கடைகளில் ஆய்வு

தமிழகத்தில் சமீபகாலமாக வெடிபொருள், பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில் வெடிவிபத்துகள் ஏற்பட்டது. இதனால் அதிகளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டது. எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்த வேண்டும். உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

கடும் நடவடிக்கை

ஆய்வின்போது அரசிடமிருந்து உரிய அனுமதியோ, உரிமமோ பெறாமல் வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் ஆகியவற்றில் எவரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com