போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதி

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதி
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

அருப்புக்கோட்டைஎஸ்.பி.கே. பள்ளி சாலையில் எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக தான் எஸ்.பி.கே. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை நகரில் இருந்து புறவழிச் சாலை இணைக்கும் இந்த சாலை வழியாகத்தான் கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.

அதேபோல மினி பஸ்களும் இந்த வழியாக செல்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நடவடிக்கை

இந்தநிலையில் தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு விட்டதால் நேற்று மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி வாகனங்களும், பஸ்களும், கார்களும் சாலையில் ஊர்ந்த படியே செல்கின்றன. சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்களும் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆதலால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீர் செய்யவும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com