சட்டப்பேரவையில் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்..!

சட்டப்பேரவையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

ஏப்ரல் 6-ந்தேதி முதல் தமிழக சட்டசபையில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடர், மே 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. அதில், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார்கள். அதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்து பேசுவார்கள்.

மேலும் இன்று நடைபெறும் விவாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்தும் வேலைவாய்ப்புகள் குறித்தும் பிரதான எதிர்கட்சியான அதிமுக கேள்வி எழுப்பும்.

சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக முதியோர்களுக்கான மாநில கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேலும் குழந்தைகளுக்கான குறுமையங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது. புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிடுவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com