அடுத்தடுத்து பதவி விலகல்...! பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா...!

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணன் தன் ராஜினாமா குறித்து பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,
அடுத்தடுத்து பதவி விலகல்...! பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா...!
Published on

சென்னை

பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயணித்தேன்! உண்மையாக, நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அண்ணாமலையை கடுமையாக தாக்கி இருந்தார்.

சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் விலகல் அறிவிப்பிற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``அன்பு சகோதரர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மல் குமாரை தொடர்ந்து கட்சியில் இருந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணன் வெளியேறி உள்ளார்.

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணன் தன் ராஜினாமா குறித்து பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,

"கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்..

இந்த வார் ரூம் சுவர்

இன்னும் எத்தனை பேரை

காவு வாங்க போகுதோ..??.....

இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com