தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் வழங்காததை வணிகர் சங்கம் வரவேற்கிறது: விக்கிரமராஜா பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் வழங்காததை வணிகர் சங்கம் வரவேற்கிறது விக்கிரமராஜா தெரிவித்தனார்.
தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் வழங்காததை வணிகர் சங்கம் வரவேற்கிறது: விக்கிரமராஜா பேட்டி
Published on

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வியாபாரிகள் சங்க மாவட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- பொங்கல் தொகுப்பில் மளிகைப்பொருட்களை தமிழக முதல்-அமைச்சர் வழங்காததை மாநில வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது. மேலும், மக்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக வழங்கும் ரூ.1,000 ரொக்கத்தை கொண்டு எங்களை போல சாமானிய வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க முதல்-அமைச்சர் வழிவகுத்துள்ளார். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆன்லைன் விற்பனை மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இழப்பு கணக்கை அரசுக்கு காட்டுவதுடன், பணியாளர்கள் 10,000 பேரை திடீர் என வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் வேலை. அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என கூறி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சட்டங்கள் அமைக்கின்றனர். அதில் சாமானிய வியாபாரிகள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்களை அமைக்கவேண்டும். சந்தையில் விற்கப்படும் எண்ணெயை ஆய்வு செய்யும் அதிகாரிகள், தரமற்ற எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடத்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நடைபெற்ற கூட்டத்திற்கு சங்க தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். முன்னதாக இணைச் செயலாளர் இப்ராஹிம் வரவேற்று பேசினார். செயலாளர் கார்மல்ராஜ் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக அரியலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையிலான மருந்து வணிகர் சங்கத்தினர் மாநில தலைவர் விக்கிரமராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கி, சால்வை அணிவித்தனர். இதில் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் வியாகுலம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com