கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
Published on

கன்னியாகுமாரி,

சட்டப்பேரவைத் தோதலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா அமித்ஷா நாகர்கோவிலில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கா மூலம் சென்று சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நாகர்கோவில் வரும் அவர் 11.15 மணி முதல் 12.15 மணி வரை இந்துக்கல்லூரி முதல் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை வரை வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற ரோடுஷோ நிகழ்ச்சி மூலம் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்திய பிறகு வடசேரியில் உள்ள உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார்.

அங்கு குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு அங்கு மதிய உணவு அருந்தும் அவர் மதியம் 2 மணிக்கு உடுப்பி ஓட்டலில் இருந்து மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்துக்கு வந்து, அங்கிருந்து 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

அமித்ஷா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமித்ஷாவை வரவேற்க குமரி மாவட்ட பா.ஜனதா கட்சியினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com