டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியீடு

டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.
டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியீடு
Published on

சென்னை,

நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மே 14, 15-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை சென்னை உட்பட 14 நகரங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் சுமார் 30 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்நிலையில் டான்செட் தேர்வுக்கான் முடிவுகள் இன்று (ஜூன் 9) வெளியாக உள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (ஜூன் 10) முதல் ஜூன் 30-ம் தேதி வரை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டான்செட் தேர்வுப்பிரிவு செயலர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com