பர்னிச்சர் கடை வளாகத்திற்குள் புகுந்த டெம்போ

நாகர்கோவிலில் பர்னிச்சர் கடை வளாகத்திற்குள் புகுந்த டெம்போ
பர்னிச்சர் கடை வளாகத்திற்குள் புகுந்த டெம்போ
Published on

நாகர்கேவில், 

கேரளாவில் இருந்து நாகர்கேவிலை நோக்கி ஒரு டெம்போ நேற்று அதிகாலை புறப்பட்டது. அந்த டெம்போவில் பன்றிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள் இருந்தன. நாகர்கேவில் ஒழுகினசேரி பகுதியில் வந்தபோது, திடீரென டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் பாழையாற்றின் கரையையொட்டி உள்ள ஒரு பர்னிச்சர் கடையின் வளாகத்திற்குள் புகுந்தது. அப்போது, கடையின் வளாகத்திற்குள் டெம்போ வருவதை கண்டு வாசலில் படுத்திருந்த 4 தெழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். இதில் ஒரு தொழிலாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கேவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்கமாக இந்த கடையின் வாசலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவில் படுத்து தூங்குவது வழக்கம். விபத்து சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு படுத்திருந்த சிலர் டீ குடிக்க எழுந்து சென்றுள்ளனர். இதனால் வளாகத்தில் படுத்திருந்த தெழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com