குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கருணாநிதி, கதிரவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், திருவையாறு கண்டியூர் வடக்கு தெரு புஷ்கரணி பகுதி ஏழை, எளிய மக்களை மனைகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மாரியம்மன் கோவில் அருள்மொழிப்பேட்டை விவசாயிகளுக்கு ஆர்.டி.ஆர். பதிவு செய்ய வேண்டும். பேராவூரணி கழனிவாசல் விவசாயிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றுவதை கைவிட வேண்டும். தனிநபர்களிடம் மொத்த நிலத்தையும் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com