சோளப்பயிர், வாழைகள் சாய்ந்தன

சோளப்பயிர், வாழைகள் சாய்ந்தன.
சோளப்பயிர், வாழைகள் சாய்ந்தன
Published on

ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களான சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, வளவம்பட்டி, நரங்கியன்பட்டி, கருப்புடையான்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்ஊரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழை 200-க்கும் மேற்பட்ட ஏக்கரிலும், சோளம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரிலும் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். சோளப்பயிர் சாகுபடிக்காக விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரையும், வாழை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1 லட்சம் வரையும் செலவு செய்திருந்தனர். சோளப்பயிர்கள் கதிர்கள் முதிர்ச்சி அடையும் தருவாயிலும் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் சோளம், வாழைகள் அனைத்தும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சூறாவளி காற்றுடன் கூடிய மழையில் சாய்ந்து போன சோளப்பயிர்கள், வாழைகளை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சேதத்தை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com