சூர்யாவிடம் வம்படி செய்வதை திரைத்துறையினர் தொடர்ந்து வேடிக்கை பார்க்கமாட்டார்கள்

சூர்யாவிடம் வம்படி செய்வதை திரைத்துறையினர் தொடர்ந்து வேடிக்கை பார்க்கமாட்டார்கள் நடிகர் கருணாஸ் காட்டம்.
சூர்யாவிடம் வம்படி செய்வதை திரைத்துறையினர் தொடர்ந்து வேடிக்கை பார்க்கமாட்டார்கள்
Published on

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை, அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது.

ஆனால் வம்படியாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் அராஜகம் செய்கின்றனர், இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர். வீண்வம்பு செய்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தங்களது சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம் பெற்றதாய் பா.ம.க.வினர் குரல் கொடுத்தனர். அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.

ஆனால் மீண்டும், மீண்டும் வம்படி செய்வதும், திரைப்பட சுவரொட்டியை கிழிப்பதும், திரையரங்குகளில் படம் ஓடவிடாமல் தடுப்பதும் அரம்பத்தனத்தின் உச்சம். தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com