மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருப்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இருவர் உயிரிழந்தது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்குக் காரணம் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது.

இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது. உலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் இலட்சணம் இது!. கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன! மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது!.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com