மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

அரக்கோணம் அருகே மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
Published on

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜ பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்கப் போவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் தாலுகா போலீசார் குருவராஜபேட்டை பகுதியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவிக்கும், அவரது உறவினர் மகனுக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குடும்பத்தினரிடம் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது, அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். மாணவி தொடர்ந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீறி மாணவிக்கு திருமணம் செய்யும் வேலையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பழனிராஜன் எச்சரித்தார். இதனால் மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com