சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
Published on

கே.வி.குப்பம்

சிறுத்தைப்புலி நடமாட்டம் எதிரொலியால் ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த சின்னநாகல் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. அந்த வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாகவும், வன விலங்குகள் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். வனப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவித்து, ஊராட்சி மன்றம் சார்பில் தண்டோரா போட்டு, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது. ஒலிபருக்கி மற்றும் தண்டோரா அறிவிப்பு நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் என்.பாலா, வனத்துறையைச் சேர்ந்த ஜி.மாசிலாமணி, ரங்கநாதன் மற்றும் கிராமப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது வனப்பகுதிக்குள் கிராம மக்கள் யாரும் விறகு சகரிக்க செல்ல வேண்டாம், இரவில் வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டாம், கால்நடைகளை பாதுகாப்பு இல்லாமல் வெளியே விட்டு வைக்க வேண்டாம், வெளியில் நடமாடும்போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com