வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

வடமதுரை,

மதுரை மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 22), கட்டிட தொழிலாளி. இவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆர்த்தி அதே பகுதியில் நர்சிங் படித்து வருகிறார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com