தோட்டக்கலை உதவி இயக்குனர் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்; டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

தேர்வு 7 மாவட்டங்களில் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்; டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
Published on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு வருகிற 17, 18-ந்தேதிகளில் காலை மற்றும் பிற்பகலிலும், 19-ந்தேதி காலையிலும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட இருந்தது. அந்த தேர்வு 7 மாவட்டங்களில் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (ஹால் டிக்கெட்) www.tnpsc.gov.in, www.tnpscexams.inஎன்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் (ஓ.டி.ஆர்.) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

தேர்வர்கள் விடைத்தாளில் கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் விடைத்தாள்கள் செல்லாததாக கருதப்படும். காலையில் நடைபெறும் தேர்வுக்கு 9.15 மணிக்குள்ளும், பிற்பகலில் நடைபெறும் தேர்வுக்கு 2.15 மணிக்குள்ளும் வந்துவிடவேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விரைவுத்தகவல் குறியீடு மூலம் தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com