பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மபொருளால் பரபரப்பு

பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மபொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மபொருளால் பரபரப்பு
Published on

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட படகுகளில் குழுக்களாக சென்று மீனவர்கள் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அரங்கன்குப்பத்தை சேர்ந்த தனபால் என்பவர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் பலூனில் கட்டப்பட்ட மர்ம பொருள் ஒன்று சிக்கியது. மீன் பிடித்து முடிந்தவுடன் கரைக்கு திரும்பிய அவர் பலூனில் கட்டப்பட்ட மர்ம பொருளை வெளியே எடுத்தார். இது குறித்து பொன்னேரி வருவாய்த்துறை மற்றும் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாசில்தார் செல்வகுமார் உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம பொருளை கைப்பற்றி திருப்பாலைவனம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெர்மாகோல் உள்ளே எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய பேட்டரி மற்றும் சிப் போன்ற பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இந்த மர்ம பொருள் பலூன் மூலமாக பறக்க விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே மர்மபொருள் கடலில் கிடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com