

சென்னை,
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.