'தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை' - அமைச்சர் கே.என்.நேரு


தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு
x

கூட்டணி கட்சியினர் தோழமையுடன் இருக்கிறார்கள் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க. உடனான கூட்டணியை அ.தி.மு.க. தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் எதுவும் இல்லை. எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சியினர் தோழமையுடன் இருக்கிறார்கள். கூட்டணி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரிடமும் அனுசரித்து நடந்து கொள்கிறார்.

கூட்டணி கட்சிகள் தொடர்பான விவகாரங்களை அவர் பார்த்துக் கொள்வார். எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சினை வருமா? என்று சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கூட்டணியில்தான் பிரச்சினை இருக்கிறதே தவிர, எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை."

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.


1 More update

Next Story