கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவரை கோபிநத்தம் வனச்சரக அதிகாரிகள் கைது செய்தனர்.
கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏரிக்காட்டைச் சேர்ந்த மாரிமுத்து, தனது நண்பர்களான கவின்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக பகுதிக்குள் நாட்டுத்துப்பாக்கி மற்றும் காற்றழுத்தத்தால் இயங்கும் தூப்பாக்கி ஆகியவற்றுடன் சுற்றித்திரிந்துள்ளனர்.

விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கேமிராவில், இவர்கள் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தது பதிவாகியுள்ளது. இதையடுத்து கோபிநத்தம் வனச்சரக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மாரிமுத்துவையும், அவரது நண்பர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com