அரசு பஸ்களில் ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை- ஓபிஎஸ்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

அரசு பஸ்களில் ஆண்களுக்குடிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.
அரசு பஸ்களில் ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை- ஓபிஎஸ்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்
Published on

சென்னை,

பெண்கள் இலவச பயண இழப்பை ஈடுசெய்ய அரசு பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சாதாரண நகரப் பேருந்துகளில் இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் செய்துள்ளனர். மகளிர் இலவச பயணம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தவறானது.

ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல அரசு பஸ்களில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com