நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை ஒருவர் சிக்கினார் - 3 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை ஒருவர் சிக்கினார் - 3 பேருக்கு வலைவீச்சு
Published on

நெல்லை,

நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். அவர்களில் 2-வது மகன் இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன் (வயது 26).

இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, 4 பேர் ஓடிவந்து இசக்கிமுத்துவை சுற்றி வளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து உயிரை காப்பாற்றி கொள்ள ஓடினார்.

ஆனால் அவர்கள் இசக்கிமுத்துவை ஓட, ஓட விரட்டிச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழையப்பேட்டை வாகன சோதனை சாவடியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். அப்போது அங்கு நின்ற ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com