இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் - தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவு

இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் - தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவு
Published on

சென்னை,

இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் இந்த மூன்றும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் ஆகும். தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா வேகமாக பரவுவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்கள் வந்த சென்னை விமான நிலையத்துக்கோ, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்ற வணிக வளாகங்களுக்கோ அல்லது வேறு சில இடங்களுக்கோ சென்ற பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

அதாவது லேசான இருமல், காய்ச்சல் இருந்தாலே, தங்களுக்கும் கொரோனா தாக்கம் இருக்குமோ? என்ற மாயை அவர்களை துரத்துகிறது. இதனால் பலரும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். சிலரோ கொரோனா தொற்று இருந்தால் தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலைக்கு உள்ளாக நேரிடுமே என்றும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களை வெறுத்து ஒதுக்குவார்களோ என்ற எண்ணத்தில் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு இருந்து விடுகின்றனர். இதனால் நோய் தாக்கம் இருந்தால், அது பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களையும், சிகிச்சைக்காக வருபவர்களையும் அரசு ஆஸ்பத்திக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக மருந்தகங்கள் காய்ச்சல், இருமலுக்கு மருந்து கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com